ஊரடங்கின் பின் மக்களின் பாடு

செங்கொடி

நடந்தே சென்றதால் வெடித்த பாதங்களுடன்

கொரோனா பரவலை தடுக்கும் முகமாக இரண்டாவது ஊரடங்கு காலம் நடப்பில் இருக்கிறது. மக்கள் பெரும்பாலும் நோய்த் தொற்றின் அச்சத்தால் வீடுகளுக்குள் முடங்கி இருக்கிறார்கள். காய்கறி உள்ளிட்ட தள்ள முடியாத தேவைகளுக்கு மக்கள் வெளியில் வந்தாக வேண்டியதிருக்கிறது. மக்களின் இந்த தேவையை மதிக்காத அரசு, அவர்களின் தேவையை வீடுகளுக்கே சென்று தீர்த்து வைக்க முடியாத அரசு, மக்கள் மீது சமூக விலக்கலை மதிக்காமல் அலைகிறார்கள் என்று குற்றம் சுமத்துவதற்கு ஏதாவது அறுகதை இருக்கிறதா? அன்றாட உழைக்கும் மக்களுக்கு அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான பொருளாதார பலத்தை ஏற்படுத்த அரசு ஏதாவது திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறதா? ரேசன் அரிசி, ஆயிரம் ரூபாய் போன்றவைகலெல்லாம் மக்கள் தேவைகளிலிருந்து எழும் திட்டங்களல்ல. மக்களை ஏமாற்றுவதற்கான திட்டங்களே. இப்படித் தான் இந்த ஊரடங்குகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

பல்லாயிரக் கணக்கான மக்கள் கால்நடையாக தங்கள் சொந்த ஊர்களுக்கு, கிராமங்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஆயிரக் கணக்கானோர் கால்நடையாகக் கூட செல்ல முடியாதவாறு தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். மும்பையில், சூரத்தில் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். அவர்கள் காவல் துறையால் தடியடி நடத்தி கலைக்கப் பட்டிருக்கிறார்கள். காவல் துறை தடியடி நடத்தி இருப்பதன் பொருள், ‘நீங்கள் பட்டினியால் சாக நேர்ந்தாலும் அதை நாங்கள் வெளிவராமல் மறைப்பதற்கு ஏதுவாக நகரங்களிலேயே சாக வேண்டும்’ என்பது தான். ஊரடங்கு தொடங்கிய முதல் வாரத்தில் 22 பேர் இவ்வாறு பட்டினியால் மாண்டிருக்கிறார்கள்…

View original post 776 more words

Design a site like this with WordPress.com
Get started